தென்னை மரம்  Coconut Tree

தென்னை மரம் Coconut Tree

3 Related Products

கோகோமேக்ஸ்

வேளாண்மையில் ஒரு நிலையான இலாபகரமான உற்பத்தியை பெற விரும்பும் தென்னை விவசாயிகளுக்கு ஏபிகேஎஸ் -ன் அன்பார்ந்த வணக்கங்கள். நாளுக்கு நாள் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, பணியாளர்களின் தட்டுப்பாடு, ஊதிய உயர்வு போன்றவற்றால் பெரும்பாலான விவசாய நண்பர்கள் அதிக பயன்களை பெறும் வகையில் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். பல வருடங்கள் கண்ணும் கருத்துமாக மரங்களை பராமரித்தாலும் முழுமையான விளைச்சலை பெற முடிவதில்லை. அப்படியே அடைந்தாலும் தொடர்ந்து அதே அளவில் அறுவடை செய்ய முடிவதில்லை. இதனால் மிகுந்த வேதனை அடைகின்றனர். மேலும் இதனை சரி செய்ய அதிக பணத்தையும் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகின்றனர். இவற்றை சரி செய்யும் நோக்கத்தில் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்டதுதான், கோகோமேக்ஸ். விவசாயிகள் எப்படிப்பட்ட மரக்கன்றுகளை பயன்படுத்தி இருந்தாலும் அனைத்து வகையான மரங்களுக்கும், மண்ணின் தன்மைக்கும் இணைந்து செயல்படும் வகையில் தயார் செய்யப்பட்டது நம்முடைய கோகோமேக்ஸ்.நமது ஏபிகேஎஸ் ஆர்கானிக் ஆனது பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இயற்கையான இடுபொருட்களை தொடர்ந்து வழங்கி அதிக நம்பிக்கையை பெற்ற சிறந்த நிறுவனம் ஆகும்.

தென்னங்கன்றுகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முதல் கட்டமாக மரங்களின் வயதிற்கு ஏற்ப, இயற்கையான உரங்களான மாட்டுச்சாணம், ஆட்டின் கழிவு மட்டும் குப்பைகள் ஆகியவற்றை மாதம் ஒருமுறை அரை கிலோ முதல் இரண்டு கிலோ வரையிலும், அல்லது நான்கு மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 5 கிலோவில் இருந்து 10 கிலோ வரையிலும் நிச்சயமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் அடுத்தடுத்த பாலைகள் உருவாகுவதற்கு இந்த உரங்கள் உதவியாக இருக்கும். இதன் பிறகு மாதம் ஒருமுறை மரத்திற்கு தேவையான நுண்ணுயிர்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க ஏ.பி.கே.எஸ் ஆர்கானிக்ஸ் இன் கோகோமேக்ஸ்னை 100 மில்லி அளவில் 1 லிட்டர் நீர் சேர்த்து தண்ணீர் பாய்ச்சும் போது அந்த தண்ணீரோடு சேர்த்து ஒவ்வொரு மரத்திற்கும் கொடுக்க வேண்டும். தண்ணீர் இன்றி வெறும் நிலத்தில் அப்படியே பயன்படுத்தக் கூடாது. மேலும் சிறிய கன்றுகளுக்கு 25 மில்லி வீதமும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள மரங்களுக்கு 50 மில்லி வீதமும் மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள மரங்களுக்கு 100 மில்லி வீதமும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து ஆரம்ப கட்டம் முதலே கோகோமேட்க்ஸிளை முறையாக பயன்படுத்தினால் மரங்களின் ஆரோக்கியமும் விளைச்சலும் முழுமையாக இருக்கும். மண்ணின் ஆரோக்கியத்தையும், மரத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதன் மூலமே தேங்காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.மாதம் ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முதல் ஏழு நாட்களில் மட்டைகளின் ஆரோக்கியம் அதிகரித்து நிமிர்ந்து நிற்க தொடங்கும். பயன்படுத்திய 15 நாட்களில் தேனீக்களின் வரவு அதிகரிக்கும். இதன் மூலம் பாலையில் தேங்காய்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

கோகோமேக்ஸ் பயன்படுத்திய மூன்றாவது வாரத்தில் தென்னை மட்டைகளின் நடுவில் உள்ள கீற்றுகளின் நிறம் நன்றாக மஞ்சள் நிறத்தில் மாறி இருக்கும். கோகோமேக்ஸ் பயன்படுத்திய நான்காவது வாரம் அதாவது 30 நாட்களில் புதிய பாலைகள் உருவாக தொடங்கும். முதல் இரண்டு மாதங்கள் பயன்படுத்தும் போது மரத்தின் உட்புறங்களிலும், வெளிப்புறங்களிலும் உள்ள நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தி சீர் செய்ய கால அவகாசம் தேவைப்படும். அதன் பிறகு மூன்றாவது முறை நீங்கள் கோகோமேட்க்ஸ் பயன்படுத்தும் போது உருவாகும் பாலைகளில்தான் முழுமையான விளைச்சலை காண முடியும். அதாவது நான்காவது முறை கோகோமேக்ஸ் பயன்படுத்தும் போது உருவாகியிருக்கும் பாலைதான் முழுமையான ஆரோக்கியமான பாலையாக கருதப்படும். இந்த பாலையில் இருந்து தேங்காய்களை பெறுவதற்கு அடுத்த ஆறு மாதங்கள் ஆகும். அதாவது பயன்படுத்திய 9 வது மாதத்தில் நீங்கள் பறிக்கும் தேங்காய்தான் முழுமையான விளைச்சலின் அடையாளமாக இருக்கும்.

கோகோமேக்ஸ் பயன்படுத்தி 9 முதல் 10 மாதங்களில் மரத்தில் அடுத்த அடுத்த பாலைகளிலும் முழுமையான காய்கள் மற்றும் குறும்பைகள் இருப்பதை உங்களால் தெளிவாக காண முடியும். மாதம் ஒரு முறை கோகோமேக்ஸினை நீர் பாய்ச்சும் போது 100 மில்லி வரை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான உரங்கள் மாதம் ஒருமுறை அல்லது நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சரியாக பயன்படுத்துவதன் மூலமும் உங்களது விளைச்சலை அதிகரிக்க முடியும். ஒரு மரத்தின் பாலையில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையின் அளவில்தான் தேங்காய்களும் உருவாகும் அதிகபட்சமாக 35 தேங்காய்களை நீங்கள் உற்பத்தி செய்யலாம். உள்ளே இருக்கும் பருப்பின் தடிமன் மற்றும் தரம் அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மேலும் கொப்பரைகளாக  35 சதவீதம் வரை அதிகமான எண்ணெய் சத்தினை நீங்கள் பெறுவதால் அதிக லாபத்தினை உங்களால் ஈட்ட முடியும்..ஒரு மாதத்திற்கு ஒரு மரத்திற்கு கோகோமேக்ஸ் அதிகபட்சம் 30 ரூபாய் வரை செலவாகலாம்.  ஆனால் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் 30 முதல் 40% உற்பத்தியை நீங்கள் அதிகரிக்க முடியும். 

தென்னை மரங்களின் நீர் தேவையை அறிந்து சரியான அளவில் கொடுக்க வேண்டும் அதாவது நீர் பாய்ச்சிய பிறகு. நிலத்தில் நீரின் ஈரத்தன்மை நன்றாக காய்ந்த பிறகு தான் அடுத்த கட்ட நீரினை பாய்ச்ச வேண்டும் ஈரம் காய்ந்த பின்பு நீர் வழங்கும்போது வேர்களின் வளர்ச்சியும் அதன் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தென்னை விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்படுவது வண்டுகளின் மூலம் தான் நமது கோகோமேக்ஸ் பயன்படுத்துவதற்கு முன்பே ஏதேனும் வண்டுகள் இருந்தால் அவற்றினை முதலிலேயே கைகளாலோ அல்லது கருவிகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தியோ அகற்றி விட வேண்டும்.

அதன் பிறகு தான் கோகோமேக்ஸினை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தென்னை மரங்கள் இயற்கையாகவே வண்டுகள் வராமல் பாதுகாக்கப்படும்.  ஆரம்ப கன்றுகள் வைத்தது முதலே கோகோமேக்ஸ் பயன்படுத்துவதன் மூலம் முழுமையான பாதுகாப்பையும் வளர்ச்சியையும் பெற முடியும். மேலும் வெள்ளை பூச்சி தாக்குதல்கள், நீர் வடிதல், வேர்கள் அழுகுதல், சோகைகள் கருகுதல், தேங்காய்கள் சிறுத்துப் போகுதல், காய்கள் வெடித்தல், மற்றும் குறும்பைகள் உதிர்வது எடை குறைவாக இருப்பது, என அனைத்து விதமான நோய்களுக்கும் நமது கோகோமேக்ஸ் சிறந்த பாதுகாப்பை கொடுக்கும். 

கோகோமேக்ஸ் பயன்படுத்தும் அளவு மற்றும் முறை:

பயன்பாட்டின் காலம் : மாதம் ஒரு முறை

முதல் மாதம் :           100 மில்லி

இரண்டாம் மாதம் : 100 மில்லி

மூன்றாம் மாதம் :    100 மில்லி

நான்கு முதல் 12 மாதங்களுக்கு - 50 முதல் 75 மில்லி என ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் பாய்ச்சும் போது உடன் சேர்த்து மரத்திற்கு கொடுக்க வேண்டும்..

Cocomax-னை கையாளும் முறை:

  • தங்களது மரங்களின் எண்ணிக்கை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப Cocomax னை பயன்படுத்தவும்.
  • Cocomax Bottle - னை திறக்காமல் இருந்தால் இரண்டு ஆண்டுகள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
  • ஒரு முறை Cocomax Bottle னை திறந்து விட்டால் நீருடன் கலந்து முழுவதையும் பயன்படுத்திவிட வேண்டும். மரங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதற்கு ஏற்ப 500 மில்லி பாட்டிலை வாங்கி பயன்படுத்தவும். தயவு செய்து ஒரு முறை திறந்து பாட்டிலை இருப்பு வைத்து பயன்படுத்த வேண்டாம், அப்டியே பயன்படுத்தினாலும் அதன் மூலம் முழுமையான பலன்களை பெற முடியாது.
  • சோதனை முறையில் உங்களது தோட்டத்தில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ள அதாவது நோய்வாய்ப்பட்ட, ஆரோக்கியமான,நன்றாக வளர்ச்சி அடைந்த,வளர்ச்சியே அடையாத, என பல்வேறுபட்ட மரங்களையும் தேர்வு செய்து அனைத்து  நிலைகளிலும் உள்ள மரங்களுக்கு முதல்கட்டமாக Cocomax - னை பயன்படுத்தலாம். ஏனெனில் கோகோமேக்ஸின் செயல்பாடு மரம், மண்ணின் தன்மை, நீரின் தன்மை, வெப்பநிலை, ஒரு மரத்தை சுற்றியுள்ள மரங்களின் நிலை, என்று பல்வேறு காரணிகளால் பலன்களை பெறுவது வேறுபடக்கூடும்.
  • தங்களது நிலத்தில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கையில் குறைந்தது 10 முதல் 20 சதவிகித மரங்களுக்காவது சோதனை முறையில் பயன்படுத்தி பார்க்க வேண்டும். அதற்கும் குறைவான மரங்களை தேர்வு செய்தால் முழுமையான பயன்களை காண்பது கடினம்.
  • கோகோமேக்ஸ் - னை பயன்படுத்துவதற்கு சில நாட்கள் முன்பே மரத்திற்கு இரண்டு கிலோ வரை மாட்டுச்சாணம் அல்லது இயற்கையான உரங்களை கொடுப்பதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும்.
  • கோகோமேக்ஸ் - னை இருப்பு வைக்கும் போதும் அல்லது பயன்படுத்தும் போதும் சூரிய ஒளியின் நேரடியான வெப்பம்படும் படி வைக்கக்கூடாது.
  • கோகோ மேக்ஸ் - னை தென்னை மரங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்துவதால் மரங்களின் உட்புற நோய்களை சரிசெய்யுமே அன்றி வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்களை பார்க்க முடியாது. ஒரு மரத்திற்கு 100 மில்லி வீதம் 3 மாதங்களுக்கு கட்டாயம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே வெளிப்புற வேறுபாடுகளை பார்க்க முடியும்..
  • கோகோமேக்ஸ் பயன்படுத்தும் போது உரிய நேரத்தில் தேங்காய்களை இறக்குவது/ அறுவடை செய்வது மிகவும் அவசியம்.  இல்லாவிட்டால் புதிய பாலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் பழைய தேங்காய்கள் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கும். இதனால் உற்பத்தி குறைவதும் காய்கள் சிறுத்துப் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் சீராக அறுவடை செய்வது என்பது எப்போதும் அதிக பயன்களை கொடுக்கும்.
  • இணையதளத்தின் வழியாக நேரடியாக நிறுவனத்தில் ஆர்டர் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நமது நிறுவனத்தின் சேவை மையத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுவார்கள். அதற்கு அவர்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தொடர்ச்சியான வழிமுறைகளை தெரிந்து கொள்வதோடு, இடை இடையே ஏற்படும் சிக்கல்களை தீர்க்கவும் உறுதுணையாக இருக்கும்.

 

 

Related Products

Related Crops

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.