மிளகாய் சாகுபடியினை பெரும்பாலான விவசாயிகள் பரவலாக பயிரிட்டு வருகின்றனர்.
தினசரி தேவையின் பொருட்டு சிரான விலை மற்றும் விற்பனை நல்ல முறையில் மேற்கொள்ள படுவதால் ஊடுபயிராகவும், முக்கிய பயிராகவும் விவசாயிகள் பயிரிடுகின்றர்.
இருப்பினும் அதிக நாட்களில் சாகுபடி செய்யப்பட்டாலும் மிளகாயில் நோய் தாக்குதல்கள் மிகவும் அதிகம். வேர்களின் பாதுகாப்பு மற்றும் மண்ணின் வளத்தை பாதுகாப்பதன் மூலம் இலைகளின் வைரஸ் தாக்குதல்கள், இலைசுருட்டு நோய், வளர்ச்சி குறைபாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம். மேலும் விளைச்சலில் ஏற்படும் இழப்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்தி இலாபகரமான வேளாண்மையை பெறலாம்..
விவசாயிகள் நமது இயற்கையான இடு பொருட்களை சரியான முறையில் (தண்ணீர் பாய்ச்சும் போது சேர்த்து பயன்படுத்துவதன் மூலமும் ) தேவையான அளவு ( ஏக்கருக்கு 4-6லிட்டர் ) குறித்த நேரத்தில் (30 நாட்களுக்கு ஒரு முறை) பயன் படுத்துவதன் மூலம் சிறந்த பாதுகாப்பான விளைச்சலை பெற முடியும். நமது ஏ.பி.கே.எஸ். ஆர்கானிக்கின் இடுபொருட்களான அபிமான் மற்றும் ஆர்பிக்ஸினை வேர்களுக்கும் புக்கள் மலரும் நேரத்தில் எப். எல்.77 -னை தெளிப்பான மூலமும் பயன்படுத்தும் போது சிறந்த விளைச்சலையும் இலாபத்தையும் பெற முடியும்.
ஒரு ஏக்கர் மிளகாய் செடிக்கு நமது ஆர்கானிக் இடுபொருட்களை பயன்படுத்தும் முறை..
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 4 லிட்டர் வீதம்
முதல் மாதம் - அபிமான்
இரண்டாம் மாதம் - ஆர்பிக்ஸ்
மூன்றாம் மாதம் - அபிமான்
நான்காம் மாதம் - ஆர்பிக்ஸ் என்ற முறைகளில் பயன்படுத்தலாம்..
நீர் பாய்ச்சும் போது துனை இடுபொருளாக இதனை பயன்படுத்த வேண்டும்.
பிற வகையான உரங்கள் எதேனும் பயன்படுத்தி இருந்தால் 5-10 நாட்கள் கழித்து இரண்டு மூன்று முறை நீர் பாயச்சிய பிறகும்
களைக்கொல்லி மருந்துகள் ஏதேனும் பயன்படுத்தி இருந்தால் 15-20 கழித்து அதாவது 3-4 முறை நன்றாக நீர் பாய்ச்சிய பிறகுதான் நமது ஆர்கானிக் இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும்.
நமது ஆர்கானிக் இடுபொருட்களில் உயிர் நுன்னூட்டங்கள் இருப்பதால் மற்ற மருந்துகள் பயன்படுத்திய உடனே நேரடியாக இவற்றை பயன்படுத்த கூடாது. எனவே சில முறை நீர்பாயச்சிய பிறகு அதன் தாக்கம் முழுமையாக குறைந்த உடன் ஆர்கானிக் இடு பொருட்களை பயன்படுத்தலாம். மேலும் சிறப்பான விளைச்பலை பெற இயற்கையான தொழு உரங்களையும் காலநடை கழிவுகளையும் ( கோழி கழிவுகள் தவிர) பயன்படுத்தலாம்.
குறிப்பு :
நமது ஆர்கானிக் இடுபொருட்கள் செடிகளின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க மட்டுமே. பிறவகையான பூச்சி தாக்குதல்களுக்கு தகுந்த ஆலோசனைகளின் பேரில் மருந்துகளை பயன்படுத்தவும்..














